இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

“பிரதமருக்கு பச்சை கொடியை காட்டுவோம் என அமைச்சர் கூறியிருப்பது அதிமுகவிற்கு களங்கத்தை ஏற்படுத்தும்” - திருமாவளவன்

April 10, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4982 Views

எதிர்கட்சிகள் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டினால் நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளது அக்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரலாற்று பிழையாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் 2ம் நாளாக காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத்திய அரசுக்கு எதிராக தமிழகமே ஒன்று திரண்டு போராடும் தற்போதைய சூழலில், மத்திய அரசுக்கு, மாநில அரசு துணைப்போவது மாபெரும் வரலாற்று கறையாக அமையும் என தெரிவித்தார். 

மேலும் அதிமுகவை சரியாக வழிநடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை தெரியவருகிறது என தெரிவித்த அவர், ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையை தருகிறது எனவும் தெரிவித்தார்.

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )