முகப்பு > அரசியல்

​மகன் அகிலேஷ் யாதவிடம் தந்தை முலாயம் சிங் திடீர் சமரசம்..!

January 10, 2017

​மகன் அகிலேஷ் யாதவிடம் தந்தை முலாயம் சிங் திடீர் சமரசம்..!


உத்தரபிரதேசத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் தனது மகன் அகிலேஷ் யாதவ்தான் முதலமைச்சராகத் தொடருவார் என முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். 

சமாஜ்வாதி கோஷ்டி மோதல் விவகாரத்தில் திடீர் திருப்பமாகக் அமைந்துள்ள இந்த அறிவிப்பு தனது மகனுடன் சமாதானப் போக்கை கடைபிடிக்க முலாயம் சிங் முடிவெடுத்துள்ளதின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 

சமாஜ்வாதியில் முலாயம் சிங், அகிலேஷ் ஆதரவாளர்கள் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தனித்தனியாக மனு அளித்தனர். 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ், கட்சி பிளவுபடும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றார். தனக்கும் தனது மகனுக்கும் மனக் கசப்புகள் இல்லை என்று கூறிய முலாயம், சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்றால் அகிலேஷ்தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் எனக் கூறினார். 

விரைவில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் முலாயம் சிங் யாதவ் கூறினார். 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்