இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

​ரஜினி, கமல், விஜய் கட்சி தொடங்கினால் வாக்களிப்பீர்களா?

December 1, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4518 Views

ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் கட்சி தொடங்கினால், அவர்களை நம்பி தமிழகத்தை ஒப்படைக்கலாம் என்ற எண்ணத்தில் வாக்களிப்பீர்களா என கருத்து கணிப்பில் தமிழகம மற்றும் புதுச்சேரி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த பதில்கள். 

அரசியலுக்கு வருவது பற்றி எப்பொழுதும் குழப்பதிலேயே இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை படத்தில் மட்டுமே அரசியல் வசனங்கள் பேசி வரும் விஜய், ஆகிய இருவரை காட்டிலும் அரசியலுக்கு வந்துவிட்டேன் என உரக்க கூறியுள்ள கமலுக்கே கட்சி தொடங்கினால் வாக்களிப்போம் என 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேளையில் 29 சதவீத பேர் மூவரும் கட்சி தொடங்கினால், யாரையும் நம்பி வாக்களிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர். 

மூவருமே கட்சி தொடங்கும் பட்சத்தில் மூவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் கமலுக்கு வாக்களிப்போம் என 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களில் அதிக சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மூவரும் கட்சி தொடங்கினால் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ரஜினி கமலை விட விஜய்க்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். 

உச்ச நட்சத்திரங்கள் கட்சி தொடங்கினால் ஆண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கமலுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதே போல் ரஜினி, விஜயை விட கமலை நம்பியே வாக்களிப்போம் என அதிக சதவீத பெண்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களில் விஜய், கமலை விட ரஜினிக்கே வாக்களிப்போம் என அதிக சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ரஜினி கமல் விஜய் கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் கமலுக்கே ஆதரவு தெரிவிப்போம் என பள்ளி வரை படித்தவர்களில் அதிக சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களில் அதிக சதவீதம் பேர் மூவரும் கட்சி தொடங்கினால் மூவருக்குமே வாக்களிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர். 

மூவருமே கட்சி தொடங்கினால் விஜய்க்கே வாக்களிப்போம் என அதிக சதவீத மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இவர்கள் யாருக்குமே வாக்களிக்க மாட்டோம் என அரசு வேலை செய்பவர்களில் அதிக சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

இந்த மூவருமே கட்சி தொடங்கினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என மத வாரியாக கேட்கப்பட்டதில்  இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களில் அதிக சதவீத பேர் கமலுக்கே வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். அதே வேளையில் கிறித்துவர்களில் அதிக சதவீத பேர் மூவருக்கு வாக்களிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர். 

Categories: அரசியல்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ராகுல்காந்திக்கு காலனி எடுத்துக் கொடுக்கும் எடுபிடிதான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்றும் தமது ஆதரவாளர்களை 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டத்திற்கு உட்பட்டே

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)