இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கும் இலங்கை தமிழ் மக்கள்!

August 3, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
16472 Views

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்திப்பதாக, இலங்கை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை காவேரி மருத்துவமனையில், இன்று 7-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அவரது உடல் நலம் விசாரிப்பதற்காக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், நடிகர் வினித் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதி இன்று வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் தங்கி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அவருக்கு நேற்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க சென்னை வரவுள்ளார். அதன் பிறகு   தொடர் சிகிச்சையில் உள்ள கருணாநிதி வீடு திரும்பலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதனிடையே, முன்னாள்  பிரதமர் தேவகவுடா இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து அவர் கருணாநிதியின் நலம் விசாரித்தார்..

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும், என இலங்கை தமிழ் மக்கள் இறைவனிடம் பிரார்த்திப்பதாக, இலங்கை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் அவர், இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். 

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )