இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​மம்தாவுடன் கமல் சந்திப்பு!

November 10, 2017 Posted By : vivekc Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7838 Views


மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, நடிகர் கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. 17ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திரைப்பட விழாவில், 65 நாடுகளைச் சேர்ந்த 144 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதன் தொடக்கவிழாவில், நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக  நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இன்று கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

இந்த பயணத்தின்போது, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, கமல்ஹாசன் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள கமல்ஹாசன், இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கமல்ஹாசன், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories:
Image
Image தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி எனவும், அவரது

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )