முகப்பு > இந்தியா

பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய அறிவிப்பு

January 09, 2017

பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய அறிவிப்பு


பெட்ரோல் பங்குகளில் DEBIT மற்றும் CREDIT கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் பங்க்குகளில் DEBIT, CREDIT கார்டுகளுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். 

வரும் 13ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் பங்க்குகளில் பரிவர்த்தனைக் கட்டணம் கிடையாது எனக் கூறியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் வங்கிகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்