முகப்பு > இந்தியா

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது ஆந்திர அரசு

January 09, 2017

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது ஆந்திர அரசு


தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீரை, ஆந்திர அரசு  பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திறந்து விட்டுள்ளது. 

சென்னையின் குடிநீர் தேவைகளுக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, விநாடிக்கு 1000 கனஅடி கிருஷ்ணா நதிநீர்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த தண்ணீர் ஐந்து நாட்களுக்குள் தமிழக எல்லையான ஊத்து கோட்டை ஜுரோ பாய்ண்டை வந்தடையும் எனவும், இதன் மூலம்  கோடை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என தமிழக  பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

மேலும் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான  ஒப்பந்தப்படி தர வேண்டிய 8 டிஎம்சி தண்ணீரில் குறைந்தது 4 டிஎம்சி தண்ணீராவது  ஆந்திரா வழங்கும் என்றும் தமிழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்