முகப்பு > இந்தியா

ரயில் நிலையங்களுக்கு குளிர்பான நிறுவனங்களின் பெயர்களை வைக்க பரிந்துரை

January 09, 2017

ரயில் நிலையங்களுக்கு குளிர்பான நிறுவனங்களின் பெயர்களை வைக்க பரிந்துரை


பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல் ரயில்வே துறையின் வருவாயை உயர்த்தும் வகையில் ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு குளிர்பான நிறுவனங்களின் பெயர்களை வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட நிலையில், விரைவில் ரயில்வே வாரியம் இதற்கான ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ராஜ்தானி ரயில்களுக்கு ’பெப்ஸி’ நிறுவனத்தின் பெயரும், சதாப்தி ரயில்களுக்கு ‘கோக்’ நிறுவனத்தின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கொள்கையின்படி, ஒரு ரயிலின் உள்ளேயும், வெளிப்புறங்களில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்