முகப்பு > இந்தியா

காவிரி நதிநீர் விவகாரத்தில் இழப்பீடு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் புதிய உத்தரவு

January 09, 2017

காவிரி நதிநீர் விவகாரத்தில் இழப்பீடு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் புதிய உத்தரவு


காவிரி நதிநீர் விவகாரத்தில் இழப்பீடு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சாட்சியங்களின் பட்டியலை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடாததை அடுத்து, அம்மாநில அரசுக்கு எதிராக, கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களின் பட்டியலை, ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இரண்டு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், 4 வார காலத்துக்குள் சாட்சியங்களின் பிரமாணப் பத்திரம், நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, நீதிமன்றப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்வார் என்றும், அதனை அடுத்து அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.  இந்த வழக்கு 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்