இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தால் மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு!

November 8, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
929 Views

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில், விமான போக்குவரத்து பாதிகப்பட்டது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க ஏர் இந்தியாவின் நிரந்தரப் பணியாளர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்றிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பும், தாமதமும் காணப்படுகிறது. இதன் காரணமாக மும்பை விமானநிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்தனர். இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏர் இந்தியாவின் நிரந்தரப் பணியாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )