தியேட்டருக்குள் சமோசாக்களுடன் நுழைந்தவர்கள் தடுத்து நிறுத்தம்: பிரபல மல்டிபிளக்ஸ் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு! | Mumbai: Cops stopped MNS leaders from bringing outside food to multiplex | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

தியேட்டருக்குள் சமோசாக்களுடன் நுழைந்தவர்கள் தடுத்து நிறுத்தம்: பிரபல மல்டிபிளக்ஸ் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு!

August 7, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2627 Views

திரையரங்குகளுக்கு பெரும்பாலானவர்கள் செல்ல தயங்குவதற்கு முக்கியமான காரணம் டிக்கெட் கட்டணம் மட்டுமல்லாமல் அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விலை அதிகம் இருப்பதாலேயும் தான் என்பது நாம் அறிந்ததே.. வெளியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பண்டங்களை திரையரங்கு நிர்வாகத்தினர் அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் மகராஷ்டிர மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வெளி உணவுகளை எடுத்துச் செல்லலாம் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதனிடையே மகராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த 17 பேர் மும்பையின் லோயர்  பாரல் பகுதியில் உள்ள பிவிஆர் சினிமாஸ் தியேட்டருக்கு நேற்று மதியம் 2.40 மணி ஷோவிற்கு டிக்கெட் எடுத்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் வெளியில் இருந்து கொண்டுவந்திருந்த சமோசா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனர். தியேட்டருக்குள் அவர்கள் சமோசாக்களுடன் உள்ளே நுழைய முற்பட்ட போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மாநில அரசு உத்தரவிட்ட பின்னரும் காவல்துறையினர் தியேட்டர் நிர்வாகங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். டிக்கெட் எடுத்துவிட்டு உரிய முறையில் உள்ளே செல்ல காவல்துறையினர் எங்களை எதற்காக தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கூறும்போது மகராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியினர் அதிக எண்ணிக்கையில் இருந்ததாலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் சொல்லப்படுகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )