இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​செல்போன்களில் ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது பற்றி கூகுள் விளக்கம்!

August 4, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2556 Views

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது எப்படி என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்  ஆண்ட்ராய்டு போன்களின் காண்டாக்ட் பட்டியலில் தானாகவே பதிவாகி இருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு செல்போன் நிறுவனத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை என ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. 

இந்நிலையில் ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2014ம் ஆண்டு உடாய் சேவை எண் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கவனக்குறைவாக கோடிங்  செய்யப்பட்டுவிட்டதே இப்பிரச்னைக்கு காரணம் என்று கூறியுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள் நிறுவனம்,  ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என உறுதியளித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 


 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )