இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மூலிகைகளின் அரசி : துளசி

September 22, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1251 Views

தற்பொழுதைய காலகட்டத்தில் மூலிகைப் பொருட்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் குறைவாகிவிட்டது. குறைந்த நேரத்தில் எளிதாக கிடைக்கும் துரித உணவுகளின் சுவைக்கு நம் நாக்கு அடிமையாகிவிட்டது.

இதுபோன்று பரபரப்பாக இருந்தாலும், சிறிதளவு மூலிகைகளை நாம் சாப்பிடுவது நம் உடல் நலனில் பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், மூலிகைகளின் அரசி என அழைக்கப்படும் துளசியின் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம். துளசியை நம் உணவில் எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் நன்மையை ஏற்படுத்துகிறது என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

துளசியின் நன்மைகள்:

1. துளசி மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதனால், மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது. தினமும் துளசி உட்கொண்டால், நேர்மறையான கருத்துக்கள் நம் மனதில் உருவாகத் தொடங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2. சளி, இருமல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு துளசி ஒரு தீர்வாக இருப்பது மட்டுமல்லாமல், நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

3. துளசி சாப்பிடுவதன்மூலம் முகம் பொலிவுடன் இருக்கிறது. முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. பல் தொடர்பான  பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் துளசி உதவுகிறது.

தினமும் உணவில் சிறிதளவு துளசி எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மையளிப்பதாகவும் உடல் சோர்வடையாமல் தடுப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )