இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​பாலியல் வன்புணர்வு குறித்த கணவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மகளிர் ஆணைய தலைவி!

September 21, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
919 Views

ரேவாரி பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த தனது கணவருக்கு டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் ரேவாரி பகுதியில், 19 வயது மாணவி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் மயக்க மற்றும் போதை மருந்துகள் கொடுக்கப்பட்டு கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார், இச்சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியதாகும்.

ரேவாரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. 

இதனை கண்டிக்கும் விதமாக
ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான நவீன் ஜெய்ஹிந்த், 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் செய்யப்படும் எந்த பாஜக தலைவருக்கும் தான் 20 லட்ச ரூபாயை இழப்பீடாக தருவேன் எனக் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய நவீன், ஒரு பெண்ணின் மானம் 2 லட்ச ரூபாய்க்கு தான் மதிப்பு கொண்டதா? இதற்காக முதலமைச்சராகிய நீங்கள் வெட்கப்படவேண்டும் எனவும் கூறினார்.

ஆம் ஆத்மி மாநிலத் தலைவரான நவீன் ஜெய்ஹிந்தின் இக்கருத்திற்கு அவரின் மனைவியும், டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியுமான ஸ்வாதி மலிவல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது கணவரின் கோபம் மற்றும் வலி ஆகியவற்றிற்காக நான் பரிதாபப்படுகிறேன் ஆனால் அவர் பேசியதற்காக பரிதாபப்படமாட்டேன் எனக் கூறினார்.

எனது கணவரின் பேச்சை நான் ஆதரிக்கவில்லை அதனை கண்டிக்கிறேன். நீங்கள் கோவப்படுகிறீர்கள் என்பது சரியானதே ஆனால் பொதுவெளியில் பேசும்போது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை” என்றார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )