இன்றைய வானிலை

  • 32 °C / 89 °F

Breaking News

Jallikattu Game

​எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகேயுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்!

January 21, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
930 Views

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறலைத் தொடர்ந்து வருவதையடுத்து எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 120 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அந்நாடு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

எல்லையில் தொடரும் தாக்குதலையடுத்து எல்லையோர கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் செக்டார் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த 120 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த 3 நாட்களுக்கு பள்ளிகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுடனான சந்திப்பைத் தொடர்ந்து

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மழை பொழிய வேண்டும்

குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது, கேரளாவில் புதுச்சேரி

தற்போதைய செய்திகள் Jun 24
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.65 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.29 /Ltr (₹ -0.07 )