இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

2ஜி விவகாரம் தொடர்பாக ஆ.ராசா எழுதிய 2G Saga Unfolds புத்தகம் டெல்லியில் வெளியீடு

January 20, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1618 Views

2ஜி விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா எழுதிய புத்தகம், டெல்லியில் வெளியிடப்பட்டது. 

2G Saga Unfolds என்கிற தலைப்பில், ஆ.ராசா சிறையில் இருந்தபோது எழுதிய இப்புத்தகத்தை, ஹர் ஆனந்த் பப்ளிகேஷன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், ஆ.ராசா புத்தகத்தை வெளியிட, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூப் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஆ.ராசா பேசும்போது, நீதிபதி ஷைனி தன்னிடம் 1700 கேள்விகளை கேட்டதாகவும், இதே போல் சிபிஐ தன்னிடம் கேள்விகளை கேட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்றார்.

தான் எழுதிய புத்தகத்துடன் சென்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதாகவும், தனது வேதனைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார் என்றும் ஆ.ராசா குறிப்பிட்டார்.

விழாவில் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தானும் ஆ.ராசாவும் ஒரே அமைச்சரவையில் இருந்தோம் என்றும், அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நிலையில், கடைசியாக வெற்றி பெற்றார் என்றும் கூறினார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒன்றாக இருக்கவேண்டும், என்றும் பரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )