முகப்பு > இந்தியா

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி!

June 19, 2017

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி!


பீகார் மாநிலத்தில் 7 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவி, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 7 பேர் கும்பல் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். 

பின்னர் சிறுமி கண்விழித்த போது அவர் ரயிலில் இருந்துள்ளார். அப்போது, பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர், குயுல் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலில் இருந்து சிறுமியை வீசிவிட்டு தப்பினர். 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி, பாட்னா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்