முகப்பு > இந்தியா

உத்தரகாண்டில் பத்ரிநாத் கோவில் மலைப் பாதையில் கடும் நிலச்சரிவு!

May 19, 2017

உத்தரகாண்டில் பத்ரிநாத் கோவில் மலைப் பாதையில் கடும் நிலச்சரிவு!


உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில் நேரிட்ட கடும் நிலச்சரிவால் 15 ஆயிரம் பக்தர்கள் தவித்துவருகின்றனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பத்ரிநாத்தில் உள்ள கோயிலுக்கு  பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்துவருகின்றனர்.

பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்