முகப்பு > இந்தியா

திருட்டுத்தனமாக பொறியியல் தேர்வு எழுதிய 25 மாணவர்கள் கைது!

May 19, 2017

திருட்டுத்தனமாக பொறியியல் தேர்வு எழுதிய 25 மாணவர்கள் கைது!


மகாராஷ்ட்ராவில் சிவசேனா பிரமுகர் ஒருவரின் வீட்டில் இருந்தபடியே பொறியியல் தேர்வு எழுதிக்கொண்டிருந்த 25 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 25 மாணவர்கள் அவுரங்காபாத் நகரில் உள்ள சிவசேனா பிரமுகரரின் வீட்டில் அமர்ந்தபடியே பொறியியல் தேர்வை எழுதியுள்ளனர். பொறியியல் 3ம் ஆண்டு படித்து வரும் அம்மாணவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2ம் தேதி நடைபெற்ற பொறியியல் தேர்வைத்தான் தற்போது அவர்கள் எழுதியுள்ளனர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 2ம் தேதி நடைபெற்ற செமஸ்டர் தேர்வு விடைத்தாளில் எதுவும் எழுதாமல் வெற்று காகிதத்தை கொடுத்துவிட்டு 25 பேரும் வீடு திரும்பியுள்ளனர். அதே விடைத்தாளில் தற்போது அவர்கள் தேர்வு எழுதியுள்ளதால், கல்லூரி அனுமதியுடன்தான் மாணவர்கள் இவ்வாறு தேர்வு எழுதியுள்ளார்கள் என தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து  இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்