முகப்பு > இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

May 19, 2017

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தீர்ப்பளித்தார். 

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மே இரண்டாம் தேதி அமலாக்கத்துறை முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்