இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல்

February 19, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1114 Views

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு முறைகேடாக பண பரிமாற்றம் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல் வைத்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. 

11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிபிஐ சார்பில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியை இண்டர்போல் உதவியுடன் இந்தியா அழைத்துவந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. 

மோசடியில் நீரவ் மோடிக்கு உதவிய முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட பலரை கைது செய்து விசாரித்து வருகிறது. முறைகேடாக பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீரவ் மோடிக்கு சொந்தமான 5,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நகை, சொத்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், நீரவ் மோடி முறைகேடாக பண பரிமாற்றம் செய்ய உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தினமும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி அருகே, இளம்பெண்ணை கடத்திச்

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பெண் தலைமை நீதிபதி

தற்போதைய செய்திகள் Jul 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.45 /Ltr (₹ -0.14 )
  • டீசல்
    ₹ 71.92 /Ltr (₹ -0.14 )