முகப்பு > இந்தியா

துப்பாக்கி முனையில் காதலனை திருமண மேடையிலிருந்து கடத்திச் சென்ற காதலி!

May 18, 2017

துப்பாக்கி முனையில் காதலனை திருமண மேடையிலிருந்து கடத்திச் சென்ற காதலி!


உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹரிம்பூர் மாநிலத்தில் திருமண மேடையில் இருந்த மணமகனை அவளுடைய காதலி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரிம்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாகா கிராமத்தில் திருமண மண்டபத்திற்குள் திடீரென கையில் துப்பாக்கியுடன் புகுந்த இளம்பெண், மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனின் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளார். 

இளம்பெண்ணின் கையில் துப்பாக்கி இருந்ததால் திருமணத்திற்கு வந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நடந்து முடிதுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, இளம் ஒருவர் ஒருவர் தனியாக வந்து பலபேர் முன்னிலையில் மண மகனை கடத்திச் சென்றுள்ளார் என்பது நம்பும்படியாக இல்லை என கூறினார். மேலும் மணமகன் விருப்பத்துடனே அந்த பெண்ணுடன் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் கடத்தப்பட மணமகனையும் கடத்திச் சென்ற இளம்பெண்ணையும் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

திரைப்படங்களில், காதலிக்கு திருமணம் நடக்கும்போது, ஹீரோ நுழைந்து அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு ஹீரோயினை கூட்டிச் செல்வார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படி நடப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் துணிச்சலாக காதலனை கடத்திச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. 

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலர்களுக்கு எதிராக Anti Romeo Squad என்னும் அமைப்பு செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்