இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

வங்கிகளில் 900 கோடி கடனை வாங்கி விட்டு வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர்!

February 18, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2430 Views

வங்கிககளில் 900 கோடி கடன் பெற்ற Rotomac பேனா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், தலைவருமான விக்ரம் கோத்தாரி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றில் விக்ரம் கோத்தாரி 900 கோடி கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், அலகாபாத் வங்கியிடமிருந்து 352 கோடி ரூபாயும், யூனியன் வங்கியிடமிருந்து 485 கோடி ரூபாயும் கோத்தாரி பெற்றுள்ளார். வங்கி விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்த கடனுதவிகளை வங்கிகள் வழங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.

கான்பூரில் உள்ள கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் 11,500 கோடி மோசடி செய்த புகாருக்கு உள்ளான வைர வியாபாரி நீரவ் மோடி, திடீரென நாட்டை விட்டு வெளியேறியது டெல்லி அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு தொழிலதிபருமான விக்ரம் கோத்தாரி தலைமறைவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு

கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்

ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)