முகப்பு > இந்தியா

டெல்லி ஜந்தர் மந்தரில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!

July 17, 2017

டெல்லி ஜந்தர் மந்தரில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!


விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் அய்யா கண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

போராட்டத்தின் முதல்நாளான நேற்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர். போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்