இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

மத்திய அரசுக்கு நாப்கின் அனுப்பும் போராட்டம் நடத்தும் இந்திய மாணவர் சங்கம்!

July 17, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4441 Views

கடந்த ஜீலை ஒன்றாம் தேதி முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆடம்பர கார்கள், விடுதிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிற்கு வரிகள் விதிக்கப்பட்டதாக பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் காலங்களில் பல மாநிலங்களில் பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வுகள் இல்லாத காரணங்களால் சாம்பலை பயன்படுத்துதல், பழைய துணிகளை பயன்படுத்தும் நிலையில்,  நாடுமுழுவதும் பெண்களுக்கு நாப்கின்கள் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் தீவிரமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், நாப்கினுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்திய மாணவர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாப்கினுக்கு விதிக்கப்பட்ட வரியை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு நாப்கின் அனுப்பும் போராட்டத்தை துவக்கியுள்ளது. இந்திய மாணவர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் உள்ள பெண்கள் மத்திய அரசிற்கு நாப்கின்களில் Bleed without tax #BleedWithoutFear என்ற வாசகங்களை எழுதி அனுப்பி வருகின்றனர்.மேலும் நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்பை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளும், பெண்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போராட்டத்திற்கு ஆண்களும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் தம்மை தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நக்சல்களுக்கும், பாதுகாப்பு

விமானப் போக்குவரத்துத்துறை மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தால்

வங்கிககளில் 900 கோடி கடன் பெற்ற Rotomac பேனா தயாரிப்பு நிறுவனத்தின்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)