இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

​மோசமான மருத்துவமனை காரணமாக விவசாயி மகளுக்கு டிராக்டரில் வைத்து பிரேத பரிசோதனை!

July 17, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2243 Views

மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டம் சிமரியா கிராமத்தைச் சேர்ந்த ரக்‌ஷா என்ற 15 வயது பெண்ணுடைய பிரேத பரிசோதனை ‘டிராக்டரில்’ வைத்து செய்யப்பட்டிருக்கிறது. மோசமான மருத்துவ வசதிகள் காரணமாகவே இப்படி செய்யப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று தன்னுடைய தந்தைக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்ற ரக்‌ஷா மின்கம்பியை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதன் காரனமாக உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அப்பெண்ணின் உறவினர்கள் தங்களுடைய விவசாய டிராக்டரில் வைத்து உடலை எடுத்துக்கொண்டு சிமரியா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த சுகாதார நிலையத்தில் உள்ள பிரேத பரிசோதனைக்கூடம் மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனால், உடலை கொண்டு வந்த டிராக்டரிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். ஏற்கனவே, 15 வயது இளம்பெண்ணை பலிகொடுத்த துயரில் இருந்த ரக்‌ஷாவின் பெற்றோர் மருத்துவர்களின் இந்த செயலால் அதிர்ச்சிய்டைந்தனர். 

ஆனால், மருத்துவர்களும், காவல்துறையும் இந்த செய்தியை மறுக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கூடம் இருட்டாக இருந்ததால், மின்சாரம் தாக்கியதால் பாதிக்கப்பட்ட உடலை மட்டும் வெளிச்சத்தில் வைத்து பார்த்ததாகவும் ஆனால் பிரேத பரிசோதனைக்கூடத்தில் வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கூடத்தில் வெளிச்சம் இல்லாத சூழலில் பிரேத பரிசோதனை எப்படி நடந்தது என்ற கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. இந்த சம்பவம் மத்தியப்பிரேதத்தில் உள்ள சுகாதாரக்கேடுகளை காட்டுவதாகவும், மாநிலத்தின் மோசமான நிர்வாகமே இதற்கு காரணம் என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில், பீகார் முன்னாள்

டெல்லியில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக் கூறி,

உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 25

லிங்காயத் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும்

புதுவை நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில்

தற்போதைய செய்திகள் Mar 24
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 75.06 (லி)
  • டீசல்
    ₹ 66.64 (லி)