முகப்பு > இந்தியா

நோய்களை குணமாக்க ஜோதிடர்களை பயன்படுத்தும் மத்திய பிரதேச அரசு!

July 17, 2017

நோய்களை குணமாக்க ஜோதிடர்களை பயன்படுத்தும் மத்திய பிரதேச அரசு!


மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கள் நோய்களுக்கான காரணங்களை ஜோசியர்கள், ஜோதிடர்கள், குறி சொல்லுபவர்கள், வாஸ்து நிபுணர்கள் மற்றும்  வேதங்களை வைத்து எதிர்காலத்தை கணிப்பவர்களிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ள மத்திய பிரதேச அரசு ஏற்பாடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அரசு மருத்துவமனைகளிலும், போபாலில் உள்ள யோகா மையத்திலும் நோயாளிகள் ஜோதிடர்களையும், கைரேகை பார்த்து குறி சொல்பவர்களையும் சந்தித்து அவர்களுக்கு வரும் நோய்களுக்கான காரணங்களையும், பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் வெளிநோயாளிகளை மருத்துவர்கள் சந்திப்பது போல ஜோதிடர்களையும் நோயாளிகள் ஒரு வாரத்தில் இரண்டு முறை சந்திக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.  

இதற்காக பதஞ்சலி மையத்தில் பயிற்சி பெற்ற ஜோதிடர்கள், ஜோசியர்கள், கைரேகை பார்ப்பவர்கள், குறிசொல்பவர்கள் போன்றவரகளை பணிகளில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு மருத்துவ மாணவர்கள் உதவியாளர்களாக இருப்பது போல, ஜோதிடர்களுக்கும் மற்றவர்களும் பதஞ்சலி மையத்தில் படிக்கும் மாணவர்கள் உதவியாளர்களாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தப்போகிறோம் எனக்கூறி நீட் நுழைவுத் தேர்வு நடத்தி மாநில பாடத்திட்டத்தில் படித்த கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய பாஜக அரசு ஜோசியத்தின் மூலம் நோய்களை குணப்படுத்தும் அரசு திட்டங்களை அறிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்