முகப்பு > இந்தியா

இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

July 17, 2017

இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!


இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் அண்மையில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர்  நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர்.

இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் லண்டன் இசை நிகழ்ச்சியில் இந்தி ரசிகர்கள் வெளியேறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான்,“ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் தான் இல்லை” என்றும், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் தாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்