இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​பெட்ரோல், டீசல் விலையை 4 ரூபாய் உயர்த்த திட்டம்!

May 17, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1197 Views

பெட்ரோல், டீசல் விலையை அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 4 ரூபாய் அளவுக்கு உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச விலை நிர்ணயத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. எனினும், கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு, 19 நாட்கள் எண்ணெய் விலை மாற்றப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து பாஜக அங்கு பதவியேற்றுள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த 14ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையை 4 ரூபாய் முதல் 4 ரூபாய் 55 காசுகள் வரை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசிலிருந்து 4 ரூபாய் வரை உயர்த்துவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

19 நாட்கள் விலை உயர்த்தப்படாததால், அதனை ஈடுகட்டும் வகையில், அடுத்த சில வாரங்களுக்கு இந்த விலை உயர்வு தொடர்ந்து இருக்கும் என தெரிகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )