இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மிதக்கும் படகில் நடந்த அமைச்சரவைக் கூட்டம்!

May 17, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1607 Views

உத்தரகாண்டில் புதுமையான முறையில் அமைச்சரவைக் கூட்டத்தை படகில் நடத்தியுள்ளனர்.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் மாநிலமான உத்தரகாண்ட், பசுமையால் போர்த்தப்பட்ட மாநிலமாகும். முற்றிலும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை நம்பியே இம்மாநிலத்தின் பொருளாதாரம் இருக்கிறது.

இந்நிலையில், சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் முயற்சியாக அம்மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் மிதக்கும் படகில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக உயரமான தெஹ்ரி ஏரி அணையில் (Tehri), மெரினா என்ற பெரிய படகில் உத்தரகாண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் நடைபெற்றது. இதற்காக மெரினா படகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

சுற்றுலாவை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில செய்தித்தொடர்பாளர் கூட்டத்திற்கு பிறகு கூறினார்.

உல்லாச விடுதிகள், ஆயுர்வேதம், யோகா போன்றவையுடன், அலைச்சறுக்கு விளையாட்டு, Bunjee Jumping, கேம்பிங், பறவைகள் பார்வையிடுதல், நீர் சாகச விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு சாகச விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையிலான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மாநில சுற்றுலாத்துறை மேலும் மேம்படும் என்றும் கூறினார்.

பொதுவாக சட்டமன்றங்களில் மட்டுமே அமைச்சரவைக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில், ஏரியில் உள்ள மிதக்கும் படகில் இக்கூட்டம் நடத்தியிருப்பது பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக சுற்றுலா வரைப்படத்தில் உத்தரகாண்டை இடம்பெறச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்று உத்தரகண்ட் முதல்வர் ராவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
    

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )