முகப்பு > இந்தியா

இந்தியாவுடன் சமரசம் கிடையாது!

July 16, 2017

இந்தியாவுடன் சமரசம் கிடையாது!


டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்பப் பெறும் வரை, சமரச பேச்சுக்கே இடமில்லை என, சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா வெளியிட்டுள்ள தகவலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தற்போது ஒரே வழி, இது மட்டுமே என்றும் சீனா பிடிவாதமாக கூறியுள்ளது. இந்தியா அவ்வாறு ராணுவத்தை திரும்பப் பெறவில்லை என்றால், பிரச்னை மேலும் சிக்கலாகும் என்றும், நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. பூடான் அழைப்பு விடுக்காமலேயே, டோக்லாம் பிரச்னையில் அந்நாட்டிற்கு உதவுவதாக கூறி, எல்லையில் இந்தியா ராணுவத்தை நிறுத்தியிருப்பதாகவும், சீனாவின் ஸின்ஹுவா நிறுவனம் விமர்சித்துள்ளது. எனினும், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறுவதை இந்தியாவும், சீனாவும் அனுமதிக்க கூடாது என்று ஜெய்சங்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.  அமைதி என்பது விலை மதிப்பற்றது என்று சுட்டிக் காட்டியுள்ள சீன செய்தி நிறுவனம், அந்த வகையில் ஜெய்சங்கரின் கருத்து ஆக்கப்பூர்வமானதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பிரச்னையை ராஜாங்க ரீதியாக அமைதியான முறையில் தீர்வு காண சீனா விரும்புவதாகவும், ஆனால், நிபந்தனையின்றி எல்லையில் படைகளை இந்தியா வாபஸ் பெறவேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்