இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

குடியரசுத் தலைவர் தேர்தல் எப்படி நடக்கும்?

July 16, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4909 Views

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை செய்வதற்கான தேர்தல் நாளை (17ஆம் தேதி) நடைபெறுகிறது.

இதில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். இவை அனைத்தும் தெரிந்த விஷயம் தான்... ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் எப்படி நடக்கும்? யார் வாக்களிப்பார்கள்? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..!

குடியரசு தலைவர் தேர்தல்

➤மொத்த எம்.எல்.ஏக்கள் - 4120 

➤மொத்த எம்.பிக்கள் - 776 

➤1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்குகளின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். 

➤எம்.பி, எம்.எல்.ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு - 10 லட்சத்து 98 ஆயிரத்து 822 

➤குடியரசுத் தலைவராவதற்கு தேவையான வாக்குகள் - 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 

➤பாஜக வசம் உள்ள வாக்கு மதிப்பு - 5 லட்சத்து 37 ஆயிரத்து 614 - 48.64% 

➤பாஜகவுக்கு தேவைப்பட்டும் வாக்குகள் - 11 ஆயிரத்து 828 

➤எதிர்கட்சிகளின் வாக்கு மதிப்பு - 4 லட்சத்து 02 ஆயிரத்து 230 

➤எதிர்கட்சிகளுக்கு தேவைப்படும் வாக்குகள் - 1 லட்சத்து 47 ஆயிரத்து 212 

➤பாஜக, காங்கிரஸ், திமுக உட்பட எதிர்கட்சிகளுடன் சேராத கட்சிகள். 

➤அதிமுக, பகுஜன் ஜனதா தளம், ஆம் ஆத்மி , தெலுங்கானா ராஷ்டிரா சமிதி, YSR காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் - 13 % - 1 லட்சத்து 59 ஆயிரத்து 38 

➤அதிமுகவின் வாக்கு மதிப்பு 59 ஆயிரத்து 224 

தேர்தல் நடைபெறும் முறை 

➤இதில் பொதுமக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. 

➤மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி, எம் எல் ஏக்கள் வாக்களிப்பார்கள். 

➤நியமன எம்பி, எம் எல் ஏக்கள் இதில் வாக்களிக்க முடியாது. 

➤விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் நடத்தப்படும்.

➤வாக்குகளில் 50% மதிப்பு எம்.பிக்களுக்கு 50% எம்.எல்.ஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

➤வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள், முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இருவருக்கு வாக்களிப்பர். 

➤எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். 

இறுதியாக வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில், பீகார் முன்னாள்

டெல்லியில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக் கூறி,

உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 25

லிங்காயத் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும்

புதுவை நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில்

தற்போதைய செய்திகள் Mar 24
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 75.06 (லி)
  • டீசல்
    ₹ 66.64 (லி)