இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!

April 16, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1343 Views

ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 5 நாள் பயணமாகப் புறப்பட்டார் பிரதமர் மோடி. அங்கு நடக்கும் காமென்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

இந்தப் பயணத்தில் இங்கிலாந்து, ஸ்வீடன் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மாசில்லா எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படவும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்படும்.

ஸ்வீடன் நாட்டுக்கு முதலில் செல்லும் பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வனைச் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் அங்கு நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

மேலும், ஸ்டாக்ஹோம் நகரில் செவ்வாய்க்கிழமை ஸ்வீடன் பிரதமருடன் மோடி சந்தித்து உரையாடுகிறார். அதன்பின் ஸ்வீடன் மன்னர் 16-ம் கார் குஸ்தாபையும் சந்தித்துப் பேசுகிறார்.

ஸ்டாக்ஹோமில் நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள், மோடியோடு இணைந்து பங்கேற்கின்றனர்.

அங்கிருந்து புறப்படும பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்குச் செல்கிறார். அங்கு நடக்கும்
காமென்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். மேலும், பிரதமர் தெரசா மேவையும் சந்தித்து மோடி பேச உள்ளார்.

அதன்பின் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )