​ரூ.49,999 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள புதிய எலக்ட்ரிக் பைக்! | Tronx One Electric Bike Launched In India; Priced At Rs 49,999 | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​ரூ.49,999 விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள புதிய எலக்ட்ரிக் பைக்!

July 15, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
18268 Views

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக்கை Tronx Motors நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Smartron நிறுவனத்தின் துணை நிறுவனமான Tronx Motors, ‘Tronx One’ என்ற புதிய எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ஸ்மார்ட் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக் ஆகும்.

பிரீமியம் டிசைன் அடிப்படையில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த இ-பைக் உள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏரோகிரேடு அலாய் ஃபிரேம் பயன்படுத்தி கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த ஃபிரேம் மிகவும் வலிமையானதாக இருக்கும் அதே நேரத்தில் மிகவும் இலகுவானதாகவும் துருப்பிடிக்காதவாறும் உள்ளது.

பேட்டரி:

இந்த பைக்கில் கழற்றி மாட்டும் வகையிலான 36 வோல்ட் 13.6 Ah 500 வாட்ஸ் லித்தியம் பேட்டரி (250 வாட்ஸ் பின்புற மோடார்) கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பைக் ஒரு சார்ஜில் throttle மோடில் 50 கி.மீட்டரும், எலக்ட்ரானிக் கியர் அஸிஸ்ட் மோடில் 70-85 கிலோ மீட்டரும் மைலேஜ் தருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும்.

Tronx One இ-பைக்கில் 3 எலக்ட்ரிக் கியர்கள், 6 ஸ்பீடு Shimano shifterகளுடன் கூடிய பலவகை ரைடு மோடுகளும், விர்சுவல் கியர்களும் உள்ளன. இதன் மூலம் இந்த பைக்கின் வேகத்தை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

மொபைல் செயலி:

இந்த பைக்கை tbike என்ற மொபைல் செயலியுடன் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடற்பயிற்சி இலக்குகளை அமைத்துக் கொள்ளலாம்.

விலை:

49,999 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த இ-பைக் magma red மற்றும் pacific bleu என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அறிமுக விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இ-பைக்குகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.

சர்வீஸ் மையங்கள்:

Tronx Motors நிறுவனம் சென்னை, மும்பை, புனே, கோவா, அகமதாபாத், டெல்லி-NCR, சண்டிகர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் என 9 நகரங்களில் சர்வீஸ் மையங்களை சானல் பார்ட்னர்களுடன் இணைந்து அமைக்கிறது. இந்த மையங்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொண்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16 முதல் இந்த பைக்குகளின் டெலிவரி தொடங்க உள்ளது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )