இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​பக்தர்களுக்கு தடை: வரலாற்றில் முதல் முறையாக 6 நாட்களுக்கு மூடப்படும் திருப்பதி கோவில்!

July 15, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8661 Views

வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 6 நாட்களுக்கு திருப்பதி கோவில் மூடப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மலை மீது அமைந்துள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகின் மிகவும் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர். இந்தக் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகின்றது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அவசரக் கூட்டமானது நேற்று கூட்டப்பட்டது, புட்ட சுதாகர் யாதவ் தலைமையிலான இந்தக்கூட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

கோவிலை சுத்தப்படுத்தும் பணிக்காக தொடர்ந்து 6 நாட்களுக்கு திருப்பதி கோவில் மூடப்படும் என்றும் அந்த நாட்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் தேவஸ்தான செய்தித்தொடர்பாளர் தளாரி ரவி கூறினார்.

‘அஷ்ட பந்தன பாலாலய மஹா சம்ப்ரோக்‌ஷனம்’ என்ற பெயரிலான இந்த தூய்மைப்படுத்தும் பணியானது ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த முறை 2006ல் இதேபோன்று தூய்மைபடுத்தும் பணி நடைபெற்ற போது, பக்தர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை, தரிசண நேரம் மட்டுமே குறைக்கப்பட்டது. தூய்மைபடுத்தும் பணி நடைபெறும் போது மட்டுமே பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது, முன்னதாக நாளொன்றுக்கு 25,000 பக்தர்களே வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றிற்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், அவர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதாலும், பக்தர்களுக்கு இடையூராக இருக்கும் என்பதாலும் ஒட்டுமொத்தமாக 6 நாட்களுக்கு கோவில் அடைக்கப்பட்டு, தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ள்ளப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6 மணி வரை கோவில் மூடப்படும் என்றும் அப்போது கோவில் வளாகம் மட்டுமல்லாது சன்னதி, கருவறை வரை சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்9 ஆம் தேதி முதலே பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் இருக்கும் பக்தர்கள் தரிசணம் முடிந்து 10ஆம் தேதி வரை அகற்றப்படுவர் என்றும் செய்தித்தொடர்பாளர் ரவி தெரிவித்தார்.

இந்தக் கால கட்டத்தில் இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளதால் அந்த சமயம் வரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து 6 நாட்களுக்கு கோவிலை அடைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் தரிசனத்திற்கான வைகுண்டம் காம்பிளக்ஸ், சாலை மார்க்கமான மலைப்பாதை, படிக்கட்டுகள் கொண்ட அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பாதைகளும் மூடப்படும் எனவும் இந்த தேதிகளில் பக்தர்கள் வருகையை தவிர்க்க வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது, கீழ்மலையிலேயே பக்தர்கள் தடுக்கப்பட்டுவிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )