இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடையாதது ஏன்? - நிர்மலா சீதாராமன்

September 14, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2566 Views

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மேற்கொண்டு முன்னேற முடியாமல் போனதற்கு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் திறனற்ற தன்மையே காரணம் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், ஆனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் அது போன்ற உத்தரவாதத்தை வழங்க முன்வராத காரணத்தால் டஸ்ஸால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும், ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டஸ்ஸல்ட் நிறுவனம், உதிரி பாகங்களை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை தனிப்பட்ட முறையிலேயே தேர்வு செய்துள்ளது என கூறினார். போர் விமான ஒப்பந்தங்கள் சரியான முறையில் நடைபெற்றுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது ரஃபேல் போர் விமானத்திற்கு விலை நிர்ணயிக்கும் விஷயத்தில், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் தலையீடு இருந்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வரும் 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணி அரசால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட விலையை விட, 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுவதாகவும், இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )