இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மிருகத்தனமாக இளம்பெண்ணைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மகன் கைது!

September 14, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
18536 Views

டெல்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவரின் மகன் 'ரோஹித் டோமர்' என்பவர் சிறிதும் கருணையின்றி மிருகத்தனமாக இளம்பெண் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தனியார் அலுவலகம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ரோஹித் டோமருக்கு நிச்சயம் செய்யப்பட பெண் இது குறித்து காவல்துறையில் புகாரளித்த பின்பே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த வீடியோ வெளியான உடனேயே ரோஹித் உடன் நடக்கயிருந்த தனது திருமணத்தை அவர் நிறுத்தி விட்டார்.
 


இது குறித்து மேலும் விசாரித்த பொழுது, டெல்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் மகன் ரோஹித் டோமர், பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது நண்பரின் அலுவலகத்திற்கு அழைத்து வன்கொடுமை செய்ததாகவும், இதையடுத்து அந்த பெண் அவர் மீது புகார் தெரிவிப்பதாக மிரட்டியதாலும், ரோஹித் டோமர் அந்த பெண்ணை இப்படி மிருகத் தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

மேலும், இந்த வீடியோவை பதிவு செய்த ரோஹித் டோமரின் நண்பர், அன்று இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அந்த நாளுக்குப் பிறகு அவர் ரோஹித்தை பார்க்கவில்லையென்றும் கூறியுள்ளார். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ரோஹித் டோமர் IPC 506 மற்றும் 354 விதிகளின் படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி கொடூரமான முறையில் இளம்பெண்ணை தாக்கிய ரோஹித்திற்கு தக்க தண்டனை விதிக்க வேண்டுமென சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )