இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

144 தடையை மீறி மகாராஷ்ட்ராவில் உள்ள அணையை முற்றுகையிட சென்ற விவகாரம்: ஆந்திர முதல்வருக்கு எதிராக பிடிவாரண்ட்

September 14, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2077 Views

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த 16 பேர் மீது மகாராஷ்டிர நீதிமன்றம் பிணையில்லா வாரண்ட்டை அதிரடியாக பிறப்பித்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் உள்ள பாப்லி ஆற்றின் மீது மகாராஷ்டிர அரசு அணைகட்ட முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாததால் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு நீதிபதி பிணையில்லா வாரண்ட்டை பிறப்பித்தார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )