முகப்பு > இந்தியா

​ரயில் பயணத்தில் ஆதாரைப் பயன்படுத்த புதியவழி!

September 14, 2017

​ரயில் பயணத்தில் ஆதாரைப் பயன்படுத்த புதியவழி!எம் ஆதார் என்னும் செயலிமூலம் செல்பேசியில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்கும் ஆதார் எண்ணை அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் தங்கள் அடையாள அட்டையைப் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் காட்ட வேண்டும். அப்படி அடையாள அட்டையைக் காட்டாவிட்டால் அவர் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதாகக் கருதி அபராதம் விதிக்கப்படும். வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் முதன்முறையாகச் செல்பேசியில் எம் ஆதார் என்னும் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஆதார் எண்ணை அடையாள அட்டையாகக் காட்டலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

தங்களுடைய ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்காதவர்கள் இந்த செயலிய பயன்படுத்த முடியாது என்படு குறிப்பிடத்தக்கது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்