இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!

March 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1145 Views

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2004-ம் ஆண்டு முந்தைய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி BSNL இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், இதில் அரசுக்கு 78 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி மாறன் சகோதரர்கள் கடந்த 2017ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி நடராஜன் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அப்போது வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )