இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​மனைவியைக் கண்டுபிடிக்க பலநூறு கி.மீ சைக்கிள் பயணம் செய்த ஏழைத்தொழிலாளி!

February 14, 2018 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3926 Views

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் காணமல் போன தன் மனைவியை பலநூறு கி.மீ சைக்கிளிலேயே பயணம் செய்து கண்டுபிடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், பலிகோடா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் நாயக். இவருக்கு வயது 42. இவரது மனைவி அனிதா கடந்த ஜனவரி 14ம் தேதி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தனது பழைய சைக்கிளை அவசர அவசரமாக சரிசெய்து, சைக்கிளிலேயே தனது மனைவியைத் தேடி கண்டுபிடிப்பது என முடிவுசெய்துள்ளார். இதன்படி, ஒருநாளைக்கு 25 கி.மீ என்கிற கணக்கில் கடந்த 24 நாட்களாக சுமார் 600 கி.மீ சுற்றித் திரிந்துள்ளார்.

இதற்கு இடையில் பத்திரிகைகளிலும் தனது மனைவி காணாமல் போன விவகாரம் குறித்து படத்துடன் செய்தி கொடுத்துள்ளார். இதன்மூலம், கரக்பூர் அருகே அவரது மனைவி இருப்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது. தகவல் தெரிந்த உடனே சைக்கிளிலேயே சிட்டாக பறந்து சென்று தனது மனைவியைக் கண்டறிந்து மீட்டுள்ளார்.

40 வயதைத் தாண்டிய ஏழைத்தொழிலாளியான மனோகர் தனது மனைவியைத் தேடிக்கண்டடைந்த விதம் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )