இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​பிரபல நடிகருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் தீ விபத்து!

November 14, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2756 Views

ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. 

கடந்த 1975-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகேஸ்வரா ராவ் தொடங்கிய அன்னபூர்ணா ஸ்டூடியோவை தற்போது அவரது மகனான நடிகர் நாகார்ஜுனா நடத்தி வருகிறார். திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் அவை சார்ந்த பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த நிலையில், அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் ஒன்றில் தீடிரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவிய நிலையில் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)