இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற 7 பேர் கும்பல்!

November 14, 2017 எழுதியவர் : elango எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1449 Views

கர்நாடகாவில் புதையல் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலுள்ள எம்மரகாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுதீந்திரா. சிறுவனை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்கிற மூட நம்பிக்கையை ஜோதிடர் ஒருவர் அவர் மனதில் விதைத்துள்ளார். 

இதையடுத்து தனது விவசாய நிலத்தில் கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுவனை உயிருடன் புதைத்து நரபலி கொடுக்க சுதீந்திரா முயன்றுள்ளார். இவரது முயற்சிக்கு ஜோதிடரும் வேறு சிலரும் உதவியுள்ளனர். 

இந்நிலையில் சுதீந்திராவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நரபலியை தடுத்து நிறுத்தி சிறுவனை மீட்டனர். சுதீந்திரா உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் சிறுவனின் பெற்றோர் யார் அவன் எவ்வாறு நரபலி கும்பலிடம் சிக்கினான் என்பதை விசாரித்து வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )