முகப்பு > இந்தியா

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

September 13, 2017

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!


வெளிநாடுகளில் இருந்து படகு மற்றும் விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூபாய் 4.33 கோடி மதிப்புள்ள 15.72 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தங்கம் கடத்தப்பட்டு, நாகப்பட்டிணத்திலிருந்து சென்னைக்கு கார் மூலம் கடத்தப்படும் என மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து இன்று கடற்கறை சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த புலனாய்வுப் பிரிவினர் அவ்வழியாக வந்த ஹோண்டா சிவிக் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூபாய் 2.99 கோடி மதிப்புள்ள 10.84 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் வந்த தம்பதிகளிடம் நடத்திய விசாரணையில் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கம் என்பதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் தங்கத்தை மத்திய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்ததோடு, தம்பதிகள் மற்றும் காரை ஓட்டிவந்த ஓட்டுநர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

கடந்த வாரம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்பட இருந்த 2.44கிலோ தங்கம் கடத்தல்காரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தியது தொடர்பாக ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் வேறு வேறு விமான நிலையத்திலிருந்து பயணித்து கடத்தி வந்த தங்கத்தை டெல்லி உள்நாட்டு விமான நிலையத்தில் இரு பெண்களிடம் கை மாற்றியபோது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2.44 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு தங்கத்தை கடத்திய இரு வெளிநாட்டுப்பயணிகள் மற்றும் இரு பெண்களையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்