முகப்பு > இந்தியா

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 60 வயது முதியவர்!

September 13, 2017

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 60 வயது முதியவர்!


ஹைதராபாத்தில் உள்ள குஷைகுடா பகுதியில் 60 வயது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஷைகுடா பகுதியில் சிறுமி மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் தனியாக இருக்கும்போது சைதய்யா என்னும் 60 வயது முதியவர் வீட்டிற்குள் நுழைந்து குழந்தைக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். 

பின்னர் அந்த குழந்தையை சைதய்யா அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

பின்னார் சிறுமியின் பெற்றோர் அந்த முதியவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதியவரை கைது செய்த போலீசார் பாலியல் வன்புணர்வு வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்