முகப்பு > இந்தியா

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐந்து நக்சலைட்டுகள் அதிரடி கைது!

August 13, 2017

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐந்து நக்சலைட்டுகள் அதிரடி கைது!


சட்டீஸ்கர் மாநிலம் டோங்பால் கிராம பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

சட்டீஸ்கர் மாநில தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்றான சுக்மா வனப்பகுதிகளில் நக்சல் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுக்மா மாவட்டத்துக்குட்பட்ட டோங்பால் கிராம பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல் தீவிரவாதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்