இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​நாட்டின் அதிக சொத்துமதிப்பு கொண்ட எம்.பி-க்களில் முதலிடம் பெற்ற ஜெயாபச்சன்!

March 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2029 Views

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பட்டியலில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஜெயாபச்சன் 1,000 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயாபச்சன் சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்தரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இதையடுத்து, ஜெயாபச்சன் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பாக 1,000 கோடி ரூபாயை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நகைகள்:

ஜெயாபச்சன் குறிப்பிட்டுள்ள சொத்துப்பட்டியலில் தன்னிடம் 62 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், தனது கணவர் அமிதாப்பச்சனிடம் 36 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கார்கள்:

இதே போல இவர்களிடம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ், 3 மெர்சிடிஸ், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஒரு போர்ஸே உட்பட 13 விலையுயர்ந்த கார்கள் இருப்பதாகவும் இதன் மதிப்பு மட்டுமே 13 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்ட்டுள்ளார்.

கைக்கடிகாரங்கள்:

இதே போல ரூ.3.4 கோடி மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பில் இரண்டு கைக்கடிகாரங்களும், 9 லட்ச ரூபாய் மதிப்பில் பேணா ஒன்றும், பிரான்ஸ் நாட்டில் 1,175 சதுர அடி கொண்ட வீடு ஒன்றும், 1.22 ஹெக்டேர் பரப்பளவிலான 2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களும் இருப்பதாக சொத்து மதிப்பில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இதே போல கணவர் அமிதாப்பச்சன் பெயரில் 5.7 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அவரின் சொத்துப்பட்டியலில் ஜெயாபச்சன் குறிப்பிட்டுள்ளார்.

இருமடங்கு:

2012ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் அவருக்கு 493 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார், தற்போது அவரது சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே அதிகம் சொத்துகள் உடைய முதல் நபர் ஜெயாபச்சன் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் சின்ஹா, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய் என அறிவித்திருந்தார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )