இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!

March 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1148 Views

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 20 ஆம் தேதி வரை கைது செய்ய, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை வரும் மார்ச் 24 வரை நீதிமன்ற காவலில் வைக்க, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,  ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு ஆணையம் உறுதி செய்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தினமும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி அருகே, இளம்பெண்ணை கடத்திச்

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பெண் தலைமை நீதிபதி

தற்போதைய செய்திகள் Jul 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.45 /Ltr (₹ -0.14 )
  • டீசல்
    ₹ 71.92 /Ltr (₹ -0.14 )