இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

நாட்டின் குற்றப்பின்னணி கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்கு?

February 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4755 Views

நாட்டின் பணக்கார முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு, தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் குறித்த பகுப்பாய்வுகளை மேற்கொண்டுவரும் ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)’ என்ற தன்னார்வ அமைப்பானது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு தற்போது இந்தியாவின் 29 மாநில மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஆட்சி புரிந்து வரும் முதல்வர்களின் சொத்து விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி நாட்டிலேயே பணக்கார முதல்வராக ஆந்திரபிரதேச மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு திகழ்வதாக தெரியவந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாக உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் 129 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டுவும், 48 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

இதேபோல நாட்டிலேயே குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதல்வராக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்கார் இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு 27 லட்ச ரூபாயாக உள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில் 30 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 55 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியும் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

கல்வியறிவு:

இதே அறிக்கையில் மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் 31 மாநில முதல்வர்களில் 10% பேர் 12ஆம் வகுப்பு படித்துள்ளதாகவும், 39% பேர் பட்டதாரிகளாகவும், 32% பேர் தொழிற்கல்வி பட்டதாரிகளாகவும், 16% பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 3% பேர் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்களாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றங்கள்:

நாட்டில் உள்ள 31 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களில் 35% பேர் மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 26% மாநில முதல்வர்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஏமாற்றுதல், போன்ற மிக தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்படி நாட்டிலேயே அதிக குற்ற வழக்குகள் கொண்ட முதல்வராக மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இவர் மீது 22 வழக்குகள் உள்ளன.

குற்றப்பின்னணி கொண்ட முதல்வர்கள் பட்டியலில் 2வது இடத்தில் 11 வழக்குகள் கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவருக்கு அடுத்ததாக 3வது இடத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் உள்ளனர்.

இந்த அறிக்கையின்படி 20 மாநில முதல்வர்கள் மீது எந்த வித வழக்குகளும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )