முகப்பு > இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

October 13, 2017

அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!


டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த காரை, கெஜ்ரிவால் ஆரம்பக்காலத்தில் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, இதனை அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைமைச் செயலகம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,  கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்